ஒரு பெரும் கவலை பாறாங்கல்லாய் என் தலையை வாரத்தில் பலமுறை அழுத்தி விடுகிறது.
எனக்குப் பிடித்த முயற்சிகளே கூட என் சோர்வில் , துயரில் வெறுப்பாகிவிடுகின்றன ;
எனக்குள் நான் கத்திக் கூப்பாடு போடுகிறேன் ;வேறு வழியே தோன்றுவதில்லை -
மீள்வதற்கு வழியே இல்லை என வாடிப் போகையில் ,அந்தத் துயர் எதற்கோ எப்படியோ
இறங்கிவிடுகையில் ,இது நிலைக்குமா ? இது உண்மையா ? என்ற ஐயத்தில் நான் தடுமாறுகையில்
துளிர்க்கும் சின்னஞ் சிறு சந்தோஷம் இருக்கிறதே ..அப்போது எல்லா வலிகளும் போய் ,எல்லா வழிகளும் திறந்து , எல்லாக் கலைகளும் எனைச் சூழ்ந்து ,என் மனம் நுனிக் கால்விரல்களில் ஆடும்' ' பாலே ' நடனம் இருக்கிறதே ..! ஓர் நெம்புகோலால் உலகையே நெம்பிவிடுவது போல் ,ஒரு சிறு மகிழ்வு ரேகை என் கவலை மலையையே புரட்டிப் போட்டுவிடும் அற்புதம் என்னென்பேன் !
-------சந்திர கலாதர்
