Monday, February 20, 2012

உதிக்கையில்
விழிகளால் மட்டும் அழைப்பு -
எழுகையில்
எண்ணிலாக் கரங்களில் அணைப்பு -
உயர்கையில்
வெம்மை அன்பின் பேச்சு -
உச்சியில்
நண்பனாய் எங்கும் கிள்ளு --
மாலையில்  
ஏக்கமாய் ஓர் பார்வை -
அந்தியில்
பொன்முத்தங்களில் விடைபெறுகை -
பிரிகையில் 
எனக்கோர் இருட்போர்வை -
தினம்  இது நடந்தாலும்
கதிரோனே !
என்றும் இதில் அலுப்பில்லை !
 
---சந்திர  கலாதர்