Friday, April 29, 2011

THE SOBBING PEACE..

தேம்பி அழுதபடி அமைதி அலைகிறது !


தேம்பி அழுதபடி
அமைதி அலைகிறது--

திக்கு எங்குத் திரும்பிடினும்
திரண்டு வரும் காட்சி என்ன ?

பீரங்கி நீள் மூக்குகளின்
நெருப்புச் சுவாசங்கள் !

சீறிடும் விமானங்கள்
விரித்திடும் மயானங்கள் !

அழுகை அருவிகள் !
பிண நாற்ற நாள் இதழ்கள் !

தொலைக்காட்சிச் செய்தி எல்லாம்
மனிதச் சிதைவுகள்!

கூன் உலகு மேனியிலோ
கோடி ரணக் கிழிசல்கள் !

தேவை வலி தணித்திருக்க
அவசரத் 'தன்னலத்'தையல்கள் !

அச்சாணி அவிழ்ந்துபோன
ஆரவாரப் பொய்யுரைகள் !

பள்ளிகளில் துப்பாக்கிகள்
பிள்ளைகளின் பேனாக்கள் !

இரத்தமே மை இங்கு !
பழிக்குப் பழி பாடமாச்சு !

கடத்துவதே கணக்காகி
அழிப்பது அறிவியலாய்ப்

பூநிலத்தைப் பிய்த்து எறிந்து
தரித்திரமே சரித்திரமாச்சு !

எதற்கடா இப்போர்கள் ?
ஏன் இந்த அழிவுச் சுழல் ?

வேற்றுமை வேனலிலே
எத்தனை விரிசல்கள் ?

கூறுபோட்டுக் கூறுபோட்டுக்
கூறுகெட்டுப் போய்விட்டோம் !

இருகை விரிப்பதற்குள்
எல்லைகளை எட்டுவதோ ?

முகம் பார்க்க முடியாமல்
முட்கம்பிகளை முளைக்க விட்டோம் !

வன்முறையைப் பயிராக்கி
வாய்மையையே களைஎடுத்தோம் !

ஒன்றுரைப்பேன் ;செவி மடுப்பீர் !
சிந்தித்துச் செயலாவீர் !

புறவேற்றுமைகள் எதுவெனினும்
எம்மூலை தாம் முடங்கிடினும்

எளியவர் எண்ணம் எல்லாம்
கனிவு சொட்ட நிற்பதுவே !

குழந்தைகள் சிரிப்பதெல்லாம்
பேதங்களில் பூப்பதில்லை !

பூமியின் பரப்பெல்லாம்
பசுமை பிறப்பிக்கும் உலகுயர் மாந்தர்களே !

சுயநலத் தேர் ஏறிவர
விஷ வித்துக்களை விதைக்கின்ற

சிறு கைப்பிடி எத்தர்களை
எட்டியே உதைத்திடுவோம் !

உலகு எங்கும் வளர்ந்துவிட்ட
முள் வரப்புகளை உடைத்தெறிவோம் !

கருணைமொழி கொண்டு
காயங்களில் மருந்திடுவோம் !

போதும் நாறும் வேற்றுமைகள் !
கறுப்பென்ன ? சிவப்பென்ன ?

மொழி என்ன ?மதம் என்ன ?
நாடும் வீடும் தான் என்ன ?

கருணைமொழி பேசுதற்கு
கண் இரண்டே போதாதோ ?

நமக்குள்ளே ஒரு ஜீவன்
நாடுவதோ அது உறவு !

பிரிவுகளில் பிய்ந்து பிய்ந்து
ஏக்கம் எல்லை மீறலாச்சு--

கைகோர்த்து இடை தழுவி
கால்கள் குதி நடமாட

வகைவகையாய் நாம் பாடி
வான் மேகத்துள் வலம் வருவோம் !

வான வில்லின் வண்ணங்களில்
விண்ணிலும் நட்பு வரைந்திடுவோம் !

ஒ ! உலகம் நெஞ்சுள் உருளட்டுமே !
உலகின் நெஞ்சம் விரியட்டுமே !

----சந்திர கலாதர்

A BIRD IS ABOUT TO TAKE FLIGHT !

நுழைவாயில் தோரணங்கள்
@

இதோ ஒரு பறவை
நீல வானில்
வெண்மேகங்கள் இடையே
பறக்கத் துவங்கிவிட்டது

@

இதுகாறும்
ஆண்டுகள் பலப்பலவாக
அடர்ந்த நெஞ்சக் கானகத்தின்
சிந்தனை உச்சாணிக் கொம்புகளில்
கவிதைச் சிறகை நீவியபடி
தனிமை இனிமை வெதுவெதுப்பில்
தொடுவானத்து மனோகரங்களை..
பக்கத்துப் பசுமைப் பரவசங்களை
அணுஅணுவாய் ரசித்துக்
கற்பனைக் கதிர்களை அறுவடை செய்து
காலத்துளிகளின் ஆரவாரமற்ற ஒழுகலைக்
கண்மூடி வியந்து --

@

தன் தோல்விகளில் துவண்டு
ஏக்கங்களில் நலிந்து
துயரங்களில் அழுது கரைந்து
நம்பிக்கைகளில் நடந்து
மனம் கொடியாய் வளைந்து ஆடி
மணி வடங்களில்
நொடிக் குதிரைகளைப் பூட்டி
நிமிடச் சாட்டைகளால் சுண்டி
வருடத் தேரினை உருட்டி இருக்கின்றது !

@

உள்ளதை உணர்ந்தவாறு
சொல் பிரவாகங்களை
இலக்கண இடுக்குகளில் துன்புறுத்தாது
உணர்வு ஒளியிடை
சுதந்திரமாய் மினுக்கச் செய்து
பாடத் துவங்கி விட்டது--

@

நெஞ்சிற்கும் நாவிற்கும் இடையில்
ஸ்ருதி பேதங்கள் இல்லை;
பொய்யான வேடங்கள் இல்லை ;
போதனை வேதனை இல்லை.

@

இயற்கை இதன் இதயம்;
காதல் இதன் மூச்சு ;
நீண்ட கவிதை இறக்கைகளை
இனிமையாய் விரித்து
உயர உயர
வட்டமடிக்கத் துவங்கி விட்டது ;

@

எத்தனையோ வேடுவப் பார்வைகள்
விற்களை வளைக்கப் போவது
இதற்குப் புரியாமல் இல்லை ;
எல்லாப் பறவைகளும்
ஒரே குரலில் ஒரே ராகத்தில்
ஒரே கீதத்தையே பாடினால்...?

@

பிரபஞ்ச வீதிகளில் அலைவதால்
இதன் இறக்கைகள் நக்ஷத்திர மகரந்தங்களை
மென்சாரலாக உதிர்க்கக் கூடும் --

@

ஒ !
இப்பறவை பாடுவது எல்லாம்
கால இடைவெளிகள் கடந்து
இணை இதய நரம்புகளில்
என்றோ எங்கோ தோன்றிடப் போகும்
இனிய அதிர்வுகளுக்காகவே !
எதிர் நீச்சல் அடித்து
அன்று அதைச் சேரத் துடிக்கும்
அந்த மனப் பறவைக்காகவே !

@

ஒ மனப்பறவையே !
காத்திருக்கிறேன் !
ஆம்--
பிரபஞ்ச வனத்தினிலே
மேகச் செடிகளிலே
சந்திர விளக்கொளியில்
நக்ஷத்திரப் பூப்பறித்து
மாலை தொடுத்தபடி
காலக் கடல் ஓரமாய்
யுகக் கரை மீதினில்
சூரியன் உன் வருகைக்காக --
நான் காத்திருக்கிறேன் !
வருக !வருகவே !

--சந்திர கலாதர்

[ என் முதல் கவிதை எண்ணத் தொகுப்பின் முன்னுரையாய் என்னுரையாய் 'நெஞ்சில் நடந்த சுந்தர நதிகள்'' நூலில் வெளியானது ]

Wednesday, April 27, 2011

LET ME NOT RUN AFTER FAMOUS NAMES !

Let me not run after famous names!
@@@@@

Let me not run after famous names
With my manuscript on hand
Pleading pitifully with a sheepish smile
For a favourable preface for my work
And await at their gates like a mongrel
For months for a few unworthy lines!

Let my works be my strength
And their content my confidence.

Let my trophies be the few lines
I gain from unknown faces
From far flung areas of the world
With real good will and in right earnestness!

Let me desist from organising book release functions
Stage-managed to glorify my letters
And intoxicate myself out of its kicks!

Let me refrain from begging publishers
For the paltry sums thrown at face in contempt
And boldly publish garnering my resources!

Let me ready myself to treat both bouquets
And brickbats with equanimity!

Let me not invade my near and dear
Demanding tributes for my works!

Let me not tire in my conscious efforts
To sculpt my works to finer dimensions!

Let my letters not kneel down before might
And not praise the unworthy
And ever speak for the right and deprived!

And their fangs plunge deep
Into the vices of the cheats!

---S.Chandra Kalaadhar --
S.CHANDRA KALAADHAR

Monday, April 25, 2011

THE STORMY PETREL BHARATHI !

கவிதைப் புயல் பாரதி !

அன்று..

குண்டும் குழியுமாய்

முட்டி மோத வைத்த

தமிழ்ச் சாலையிலே

இவன் ..

தீயினைத் தேராக்கி

விழியினை வில்லாக்கி

மின்னலை அம்பாக்கி

இடிகளைச் சொல்லாக்கி

புரட்சி மழையாய்

மடமை இடிக்க வந்தான் !

அடிமைக் குடிமையை

அடியோடு தகர்த்திட

ஆவேசம் பொங்கும்

கவிதைப் புயலானான் !

@

ஆனால்..

இயற்கை தொட்டதும்

இறக்கை விரித்துப்

பூக்கோலம் பூண்டு

தென்றலாய்த் திரிந்திருந்தான் !

குழந்தை முத்தமாய்

தமிழ்ச் சொற்களால்

தழுவி அணைத்திடுவான் !

@

இவன் ஒருவன்தான்

நாக்கோடு நெஞ்சையும்

நடையோடு உதட்டையும்

இணைத்துப் பிணைத்த

பித்தன் என்றானான் !

@

இவன்தான் பாரதி !

இவன் பாக்களோ

ரதி அழகு !

இவன் நெஞ்சில்

சுமந்ததோ தீ !

புனிதத் தீ !

இவன் பாடினால்

அதிருமே பார் !

இவனைப்

'பார் அதி நேரம்' எனக்

கெஞ்சுமே நம் விழி !


--சந்திர கலாதர்

Sunday, April 24, 2011

YOU SHALL COME ! EXTEND YOUR HAND !

நீ வருவாய் ! கை தருவாய் !
@@@

ஆற்றின் பெருவெள்ளம் அகன்ற கரைகளை

அறுத்துச் செல்கிறது --

புரண்டு மோதி , நுரைத்துச் சுழித்து

ஆவேசமாய்ச் சிவந்து

புது வெள்ளம் பாய்கிறது --

எங்கும் " ஹோ " ங்காரம் !

மழை தன்னைத் தானே

சாட்டையால் விளாறிக்கொண்டு

கத்திக் கதறுகிறது--

'பளப்பள ' மின்னல்கள் மேகங்களைக்

குத்திக் கிழிக்கின்றன --

பேரிடிகள் அண்டங்களைக் குட்டுகின்றன;

நொறுங்கல்கள் எங்கோ சரிகின்றன--

காற்று முடியைப் பிய்த்துக்கொண்டு

ஊளை இடுகின்றது --

ஐம்பூத ஆவேசக் கூத்தா இது ?

@

அந்த நள்ளிரவின் மைப்பூச்சில்

ஆற்றங்கரை ஓரம்

கந்தைத் துணி தலை சுற்றி

தடித்த மழைத் திரைவழி

கொடிமின்னல் ஒளியின்

நொடி விசிறல்களில்

பார்வைத் தூண்டிலிட்டு

உனக்காக....

எனக்கான சிறு படகை எதிர்நோக்கி

வெடவெடத்துக் காத்திருக்கிறேன்--

@

அண்டங்கள் கோடி நீ

தாண்டி இருந்தாலும்

என் தவிப்பு எப்படியும்

உனைப் பற்றி இழுத்து விடும்..

இசையாய்த் துடுப்பு

எனை நோக்கி வரும்--

@

என் நம்பிக்கை

சத்தியம் ! சத்தியம்!

நீ வருவாய்

கை தருவாய்

வழி அழைப்பாய் !


--சந்திர கலாதர்

WHENEVER I SEE BIRDS CAGED IN A HOME..!

WHENEVER I SEE BIRDS CAGED IN A HOME..!

Whenever I see birds caged in a home--
With small colourful birds behind the bars
Screaming pathetically and crying for freedom
Fluttering their wings in a feverish pitch
Not caring for the seeds or the cup of water inside
And wounding their wings and beaks
As they dash against the unyielding bars
With full of fright,anger and despair in eyes
Wasting what little energy they have in futile attempts
Cursing their fate amidst the heartless owners
Who boast to all visitors of their love of birds
Proudly stating as their presentation to their children--.
I fume and call upon God to curse their dear children
For a life behind sturdy prison bars at once
To let them learn the hardest way a caged life !
I declare now that anyone who enjoys caged birds
Assures a prison sentence for his descendants
And acquire a disease that would torment him at every step
And he would never have a peaceful life or death !
Oh..how cruel it is to see in markets tens of rare breeds
Stacked in small cages in blistering heat and with improper feed !
Alas ! what this blue cross does?
Have they closed their eyes and ears to this cruelty ?
Just for the assumed pleasure of your kids
Do not break the wings and throats of tiny songsters !
O foolish folks ! don't you hear their curses on your family !
O idiots ! you are not filling your chambers with their warbling
But with their cries of anguish from the pits of abdomens !
If God fails to curse you take my curse ,O folks who love caged souls !; You shall suffer from incurable diseases
And ever walk in the shadow of death !
And you pass this curse on to your descendants too !
Take seriously this clarion call on behalf of winged folks
And release them to the free winds and blue skies !
Gain your joy in their songs from their hideouts of green trees !
--
S.CHANDRA KALAADHAR

My Dear Favourites !

ப்ரிய ரூபங்கள்


முழு நிலவைப் பார்த்தவுடன் முத்தமிட வான் நிறைக்கும்
உறைபனி மேகங்கள் எனது ப்ரிய ரூபங்கள் ...

விதவிதமாய்க் குரலெடுத்து அழகழகாய்ச் சிறகவிழ்த்து சுறுசுறுப்பாய்ச் சுற்றிவரும்பறவை இனம் ப்ரிய ரூபங்கள் ...

மௌனத்தின் மோகனமாய் பூமிபெற்ற பெருமிதமாய்
நீலம் பூத்துச் சரிந்திருக்கும்மாமலைகள் ப்ரிய ரூபங்கள் ....

கோணல் கோலம் கொண்டாலும் கோபுரம்போல் அழகு பொங்கும்
கோடிப் பச்சை மர வகைகள் நாடிடும் ப்ரிய ரூபங்கள் ...

பல குரல்கள் பல நடைகள் பல மொழிகள் பயிற்றுவித்து
பசுமை நகை கரைவிரிக்கும் நதிகள் ப்ரிய ரூபங்கள்...

எல்லையற்ற வடிவங்கள் ஈடற்ற சுகந்தங்கள் என
எழில் இறைக்கும் மலர் இலைகள் எல்லாமே ப்ரிய ரூபங்கள்...

தொட்டுப் பேசும் தென்றல்வரைகடித்துவிடும் வாடைவரை
காற்றினங்கள் எல்லாமே எனது ப்ரிய ரூபங்கள்...

கார்மேக வீரர்களின் மழை அம்புச் சொரிவுதனின்
ராக தாளங்கள் ப்ரிய ரூபங்கள்...

மனமறிந்து அன்புகாட்டி குணமறிந்து வழிநடத்தி
வித்தகனாய் வளர்த்துவிட்ட தாய் தந்தை ப்ரிய ரூபங்கள்...

எட்டு மணி அவசரத்தில் "அம்மா!அப்பா!டாட்டா! என்று
பள்ளி நோக்கிப் பாய்ந்து செல்லும் என் பாலகர்கள் ப்ரியரூபங்கள்...


.....சந்திர கலாதர்

Wednesday, April 20, 2011

THE FLEX BOARD CULTURE OF TAMIZHNAADU !

The Flex Board Culture Of Tamizhnaadu !


The days of the 'Only Privileged Tribe'
Seems to be over once for all !
I gain this impression
As i walk along the streets and lanes;
Thanks to the 'Flex Board' ventures
Any 'a','b',or'c' or 'z' of Tamizhnaadu
May smile or stare at you
From the sidewalks of streets
In multi-coloured make-ups
Propped-up on casuarina poles!
If you ignore in your ego
To slight these without raising your sight
Your forehead is ready for an injury,sure!
Nowadays the roads look like
An endless array of mirrors
With almost all people of your area
Figuring themselves in this rainbow culture !
Not politics alone,it covers
Every aspect of life,
Leaving nothing to chance!
Must it be so cheap,I surmise !
Enumeration may be less perfect
Since there can never be
Any omissions of names on these boards!
Sorry..again this seems to be
A domain of male chauvinism !
Those hypocrites whose first word of address
Is 'O..Mother Folks !' conveniently deny women
Their due places amidst the numerous names
With their petty designations !
Alas ! you may require fifteen minutes at least
To patiently read these dictionary boards!
Now in my state every citizen is happy
As he is above the heads of others in every street !
What else a citizen may want
When every thing is offered free at his gates?
I could not but laugh also
That all these 'flex'es finally rest
As lean-to roofs of pavement dwellers!
If I am to offer a suggestion to an entrepreneur--
Strike your Gold in Flex Board Printing!


S.CHANDRA KALAADHAR

Friday, April 15, 2011

MILLIONS OF SPROUTING AND DYING THOUGHTS !

எத்தனை கோடி எண்ணங்கள் !

எத்தனை கோடி எண்ணங்கள் -அங்கே
எத்தனை எத்தனை வண்ணங்கள் !

இந்தோ தோன்றுது எங்கோ மறையுது --அந்தோ
இதற்கென் செய்வதடா?

வானில் எத்தனை கோடி விண்மீன்களடி?
கானில் எத்தனை கோடிச் செடிகளடி?
காற்றில் எத்தனை நுண் தூசிகளடி?
ஊற்றில் எத்தனை உல்லாசத் துளிகளடி?

அலைகடல் அலைகளைக் கணக்கிட முடிந்தால்.-
ஆதவன் வயதை அறிந்திட முடிந்தால்--
இறைவன் இது எனக் காட்டிட முடிந்தால்--
எண்ணங்கள் எண்ணிக்கை தவறாது சொல்வேன்! .

மின்னலை மிஞ்சி விரைந்தோடும் ஈட்டி எண்ணங்கள்
காற்றிற் தவழ்ந்து குழைந்திடும் மென்மழலை எண்ணங்கள்
அலையிற் துரும்பென ஆடியாடி அலைந்திடும் எண்ணங்கள்
மலையிற் குளிர்பனிச் சாரல் என்றே குவிந்திடும் எண்ணங்கள் !

மின்னற் கீற்றென நொடி இன்பம் ஈந்து
இறந்திடும் எண்ணமடி!
இறந்த இடம்தனில் மறுபடி முளைத்திடும்
கொடிய எண்ணமடி-

மாலை வானில் மிளிரும் வண்ண
மாய எண்ணமடி!
அம்மாலை தொடரும் காரிருள் எனவே
நீள் கரிய எண்ணமடி!

எத்தனை தோற்றங்கள் எத்தனை மாற்றங்கள்
எடுத்து இயம்ப முடியாதடி!
தோன்றி மடிந்தது இனியென்று வருமென்று
கூறிட முடியாதடி!

இனிய எண்ணங்கள் என்றும் உறைவீர்
என்றிட முடியாதடி!
கொடிய எண்ணங்கள் ஒழிகென என்றும்
கொன்றிட முடியாதடி!

இம்மண்ணில் புதைந்த உயிரினம் அனைத்தும்
எண்ணிடத் தொலையுமோ?
இம்மனதில் புதைந்த எண்ணங்கள் அதுபோல்
எண்ணிடக் கூடுமோ?

புதைந்திட்ட மண்ணில் பூத்திட்ட மலர்கள்
எண்ணிடத் தொலையுமோ?
புதைந்திட்ட மனதில் மலர்ந்திட்ட எண்ணங்கள்
எண்ணிடக் கூடுமோ?

புதைதலும் பூத்தலும் நடைபெறும் புவியோ
என்றும் ஒன்றன்றோ!
சிதைதலும் துளிர்த்தலும் நிகழ்ந்திடும் மனம்மட்டும்
மாறுவதேன் கண்ணே?

உலகினில் உறைபவர் தம்எண்ணம் அனைத்தையும்
ஒளிவின்றிக் கூறிடில்
உலகில் உத்தமன் இவன் என உரைசொல
எவர் உளர் சொல் கண்ணே?

------சந்திர கலாதர்

Thursday, April 14, 2011

Rag-pickers versus Vain-glories

Rag-pickers versus Vain-glories !

A huge, loaded poly-fibre sack
On his heavily-tilted back
Profusely bleeding sweat,
The rag picker boy trudges along!
He plunges his face unfailingly
Into every waste-bin within his jurisdiction,
Searching like a cock,scavenging for rags
That resemble his crumbled dreams!
To earn half-meal a day
He drags himself all along the way,
Stitching his face to the earth-
Never a look at the blue heavens-
Thrusting his fate into the back-breaking sack!
While so many such ill-fated boys and girls
Daily plod through their lives--

Yes,there is another group-
Amidst vain boastful talks,
In air-conditioned cushioned comforts,,
As arrogance personified,
Torching the hours
To poisonous smoke-rings,
Flashing costly currencies
On cups of coffee and snacks
Inside dimly-lit dungeons
Of secretive so called star-hotels--

When i see these vain glories,
The banyan of my heart
Lowers down aerial-roots of anger
In thick clusters breathing fire;
It thirsts to unlock the cocks
Of guns to train on these
Rich mindless wasteful souls!

---s.chandra kalaadhar

Sunday, April 10, 2011

O INFANT JUST OUT OF WOMB !

O infant just out of womb
What are your thoughts
Of this world?
Who makes you to smile?
What your plans are for today
Or for morrows?
Why this cry at birth?
Did not like to exit cosy comfort of
Mother's womb?
Ever faulty are our guesses
Of your cries and smiles.
O god grant me
The power to read
The language of infants!