Friday, March 23, 2012

how many deviations a life's journey takes on on its onward march!
attracted to all and sundry sweet things, like bees, on its way-
a hop here ,a bite there,a suck elsewhere,and a flight to something else;
quite puzzled to select its haunt ,it reels in pain of defeat and non-achievement ;
the dabbling continues unabated till the day dawns of its sudden enlightenment --
when ,realising its potential in a specific field ,decides to desert the others ,
of course with a heavy heart ,hardening its resolve to pursue in only one field !
it surprises life why so much haggling so long on a simple problem !
now this road is lit with surprises of successes gladdening the life!
that is how i landed on poetry from painting and other diverting passions
 
-sundaram chandrakalaadhar.

Sunday, March 4, 2012

அடிக்கடி சோர்கிறேன் 
 
மனதால் உடலால் --
 
அந்த அழைப்போ ?
 
அருகிலா?தொலைவிலா?
 
வயோதிக  விசும்பல்
 
'முன்போல் இல்லை ' -
 
மனதின் வாசகம் 
 
முள்போல் நெருடல்  -
 
ஓ..எத்தனை வேலை 
 
என்முன் தேக்கமாய் !
 
எண்ணச் சுமையில்
 
அமிழ்ந்தே தொலைகிறேன்-
 
என் மக்களுக்கான 
 
எனது கடமைகள் 
 
அதிலும் பாக்கி -
 
எழுதும் வேட்கையில் 
 
கூனிக் கிடக்கிறேன் -
 
படிக்கும் ஆசையில் 
 
படுத்துக் கிடக்கிறேன் 
 
தூங்கியும் தொலைகிறேன் --
 
என்றோ படித்தது 
 
நினைவில் எழுகுது -
 
'நன்றாக இருக்கிறேன் '
 
ஆழ்மூச்சு கொள்கிறேன் 
 
விண்ணை நோக்கி 
 
' என்னுள் சக்தி  நிரப்பு '
 
ஆணையிடுகிறேன் --
 
சில நொடிகளில் 
 
மாறிப் போகிறேன்--
 
என்னுள் எல்லாம் 
 
சக்தியின் வெள்ளம் -
 
சோர்வு ஒழிந்திடத்
 
துள்ளி எழுகிறேன் -
 
எனக்குள் எங்கும் 
 
இன்னிசைப்  பொழிவே !
 
 
 
---சந்திர கலாதர்       

--