உதிக்கையில்
விழிகளால் மட்டும் அழைப்பு -
எழுகையில்
எண்ணிலாக் கரங்களில் அணைப்பு -
உயர்கையில்
வெம்மை அன்பின் பேச்சு -
உச்சியில்
நண்பனாய் எங்கும் கிள்ளு --
மாலையில்
ஏக்கமாய் ஓர் பார்வை -
அந்தியில்
பொன்முத்தங்களில் விடைபெறுகை -
பிரிகையில்
எனக்கோர் இருட்போர்வை -
தினம் இது நடந்தாலும்
கதிரோனே !
என்றும் இதில் அலுப்பில்லை !
---சந்திர கலாதர்

No comments:
Post a Comment