Saturday, June 11, 2011

When That Meet Would Materialize ?

என்று நிகழும் அந்த சந்திப்பு ?

அவன் ஒரு கவிஞன் ..
உலகினைப் பற்றி அவன் அறியான் ,,
அவனையும் உலகம் அறியாது ..
நியாயமற்ற செயல்களைக் கண்டு அவன் காட்டுத் தீயாய்க் கனல்கிறான் .
இளமையான அவன் உள்ளத்தில் உயரிய கொள்கைகள்
பனியெனப் படர்ந்து அலங்கரிக்கின்றன ..
இயற்கையின் அற்புதப் படைப்புகளைக் கண்டதும்
அவன் தென்றலாய்க் கீதம் இசைத்து நடமிட்டு அலைகிறான்..
அலை மோதும் கலை உள்ளம் படைத்தவன் ,
தன் உள்ளத்தின் மறு உருவம் எங்காவது கண்டு இணைந்திட அலைகிறான்..
அழகினுக்கு அழகு செய்யும் அவன் கவி உள்ளம்
தன் கற்பனையில் மிளிர்ந்து நடை பயில்கின்ற
அவ்வடிவத்தை வழி எல்லாம் தேடுகையில் ...
காணும் உருவங்களில் எல்லாம்
ஓரிரு குறைகளைக் கண்டு தொய்கிறது ஒப்புநோக்கி மனம் --
ஏமாந்து ஏமாந்து தவித்துப் பயணம் தொடர்கிறது ..
என்று நிகழும் அந்த இணை இதயத்தின் சந்திப்பு ?

-----------சந்திர கலாதர்

No comments:

Post a Comment