Wednesday, June 8, 2011

MY MOTHER

MY MOTHER

Who sat and touched my infant head
When sleeping on my cradle bed
And tears of sweet affection shed?
--My Mother..

சிறு தொட்டில் மஞ்சம் மீதினிலே
மெல்லிய துயில் எனைப் படருகையில்
விழி மூடாது என் அருகமர்ந்து
கனிந்த கண்ணீர் முத்துக்களால்
பாசக் கவிதை புனைந்தது யார்?

--அம்மா..அது நீயன்றோ !

When pain and sickness made me cry
Who gazed upon my heavy eye
And wept for fear that i should die ?
--My Mother..

வலியும் நோவும் கதறி அழவைத்தால்
கனத்துச் சிவந்த என் விழிகளைத்
தன் கனிவுப் பார்வை ஆரத் தழுவிடவும்
முடிவின் முத்தம் இதழ் பதிந்திடுமோ
எனும் பேரச்சம் நெஞ்சைக் கவ்வுகையில்
மழையாய் விழிகள் மாறிவிட
சோக அருவியானது எவ்வுள்ளம் ?

--அம்மா .அது நீ யன்றோ !

Who taught my infant lips to pray
And love god's Holy Book and Day
And walk in wisdom's pleasant way?

--My Mother...

பூவிதழ்கள் இறை பாடிடவும்
தெய்வ மறைகள் தெளிந்து நேசிக்கவும்
அறிவின் சுக வழி நடப்பதற்கு
கைப்பிடித்து எனை அழைத்துச் சென்றது
யார் சொல்லவோ ?

--அம்மா ..அது நீயன்றோ !

And can i ever cease to be
Affectionate and kind to thee
Who want so very kind to me

---My Mother.

பாசம் பொழியும் என் தாயே !
பக்தியும் அன்பும் உன்மீது
பொழிதலை நிறுத்தல்
இமைப் பொழுதாகினும்
எனக்கு இயலுமாமோ ?

Ah,no ! the thought I cannot bear
And if god please my life to spare
I hope I shall reward thy care

--My Mother.

உனை மறத்தல் என்னும் அவ்வெண்ணம்
தாங்காதம்மா என் நெஞ்சம் ;
நெடுநாள் வாழ்வு கடவுள் அருள் செய்யின்
உன் கருணைக் கெல்லாம் என் தொண்டுகளால்
ஈடு செய்ய நம்பிடுவேன் .

When thou art feeble, old and grey
My healthy arm shall be thy stay
And I will soothe thy pains away
--My Mother !

-----Ann Taylor

மூப்பில் தளர்வில்அம்மா நீ நலியுங்கால்
வலிய கரம் நீட்டிடுவேன் ;
ஊன்றுகோல் என்றாகிடுவேன் ;
வாட்டும் வலிதனை விரட்டும் மருந்தாவேன் .

--மொழி மாற்றம்...சந்திர கலாதர்
[09.05..1991 ]

No comments:

Post a Comment