Thursday, June 9, 2011

WHY HEAP SO MUCH ,MAN ?

என் பழைய எழுத்துக்கள் --

[ இலக்கிய ஊஞ்சல் கையெழுத்துப் பத்திரிக்கையிலிருந்து ]

தான் சேர்த்து வைக்கும் பொருள் எவற்றையும் தான் கொண்டு செல்லப் போவதில்லை என்பதை மனிதன் அறியாமலா இருக்கிறான் ?--
அவனுக்கு அது நன்றாகவே தெரியும் !
தான் சேர்த்து வைப்பதில் முக்காற் பகுதியைத் தான் பயன்படுத்தக் கூடப் போவதில்லை என்பதும் அவன் அறியாததல்ல --

இருந்தாலும் ....பொழுது விடிந்து பொழுது சாய்வதற்குள் என்னென்ன பொருட்களையெல்லாம் தன் வீட்டினுள் குவிக்கிறான் --
எத்தனை எத்தனை மூட்டைகளாக அவற்றினைக் கட்டிப் பரண்மீது அடுக்குகிறான் ! தூசி படிய அனுமதிக்கிறான் !

ஒவ்வொரு மனிதனும் ' தனது தனது ' என்று குவிக்கும் குவியலின் உயரம்தான் எவ்வளவு ! பார்த்தாலே மயக்கம் வராதோ ?
இப்படி ஒவ்வொரு மனிதனும் குவிப்பதை நோக்கினால் --இனிமேல் மனிதன் வாழ்வதற்கு எங்கே இடம் இருக்கப் போகிறது ?
ஒரு மனிதன் வாழ்க்கை நடத்துவதற்கு
இத்தனை பொருட்களா தேவைப் படுகிறது !

இதோ..!
என் முன் உயர்ந்து நிற்கும் என் குவியல் என்னைப் பார்த்துக் கொக்கரிக்கிறது ! " இதோ உங்களையெல்லாம் கொளுத்தி எரியவிடப் போகிறேன் ". எனச் சூளுரைக்கிறேன் ! எதிர்க் கொக்கரிக்கிரேன்.." ஹ் ஹஹா ஹஹாஹ் " !

ஆனால் ,--அதற்குள் -எரிய விடுவதற்குள் ஒவ்வொரு மூட்டையையும் பிரித்துப் பார்த்துத்தான் எரிப்போமே !
எங்கிருந்து அச்சபலம் ? எவர் பேசுவது குரல் எழுப்பாமல்....ரகசியமாக ? -ஒன்றைப் பிரிக்கிறேன் --

அதிலுள்ள ஒவ்வொன்றும்-- ஒவ்வொரு கந்தையும்--ஒவ்வொரு குப்பையும் --முக்கியமாக --அதிமுக்கியமாக -தேடக் கிடைக்கா அறிய பொருளாகி விடுகின்றதே !
கடைசியில் குவியல் முழுவதும் விலைமதிக்க முடியாத செல்வமாகி முடியுதே !

இவை அன்றி என் வாழ்வில்லையோ ?
பிரிக்கப்பட்ட மூட்டைகள் மறுபடி கட்டப்படுகின்றன !
கட்டப்பட்ட மூட்டைகள் பரணுக்குத் தாவுகின்றன !
சேச்சே..! இந்த நிலை மாறாதா ?

உலகமே..! நீ மிகப் பொறுமைசாலி !
ஓ..! உனது குப்பைகள்தானே நாங்கள் !


-----சந்திர கலாதர் --
[29.-10-1991]

No comments:

Post a Comment